India

குஜராத்தில் பிடிபட்ட ரூ.25 கோடி கள்ள நோட்டு.. அதிர்ந்த போலிஸார்.. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி !

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு கள்ள நோட்டு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள காம்ரஜ் காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் ஆம்புலன்ஸ் ஒன்றில் பணம் கடத்தப்படுவதாக கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று ஆம்புலன்ஸ்காக காத்திருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸை மறித்து சோதனை செய்தபோது அதில் 6 அட்டைப் பெட்டிகளில் 25 கோடியே 80 லட்சம் பணம் இருந்துள்ளது. இதன் பின்னர் இந்த நோட்டுகளை பறிமுதல் செய்து சோதனை செய்த போலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

அந்த நோட்டுகளில் ரிசர்வ் பேங் ஆஃப் இந்தியா என்பதற்கு பதில், ரிவெர்ஸ் பேங் ஆஃப் இந்தியா என அச்சிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கள்ள நோட்டுகள் என்று நினைத்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது அது சினிமா ஷூட்டிங்காக அச்சடிக்கப்பட்ட நோட்டுகள் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: 'பசித்த பூனை முன் பாலை வைத்த தந்தைதான் குற்றவாளி' -இளம்பெண் கொலை விவகாரத்தில் RSS தலைவர் கருத்து !