இந்தியா

'பசித்த பூனை முன் பாலை வைத்த தந்தைதான் குற்றவாளி' -இளம்பெண் கொலை விவகாரத்தில் RSS தலைவர் கருத்து !

பாலியல் விவகாரத்தில் இளம்பெண் கொலைசெய்யப்பட்ட வழக்கில் பசித்த பூனைகளின் முன் பச்சைப் பாலை வைத்த தந்தைதான் மிகப் பெரிய குற்றவாளி என்று Rss தலைவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'பசித்த பூனை முன் பாலை வைத்த தந்தைதான் குற்றவாளி' -இளம்பெண் கொலை விவகாரத்தில் RSS தலைவர்  கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரகாண்ட் மாநிலம் ரஷிகேஷில் பா.ஜ.க தலைவரும் முன்னாள் அமைச்சராகவும் இருந்த வினோத் ஆர்யாவின் ரிசார்ட்டில் 19 வயது இளம் பெண் ஒருவர் வரவேற்பாளராக சேர்ந்துள்ளார். இதனிடையே கடந்த வாரம் அப்பெண் திடீரென மாயமாகியுள்ளார்.

இதனையடுத்து போலிஸார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணிடம், அதிக பணம் தருவதாகவும், விடுதிக்கு வரும் நபர்களை கவனித்துக்கொண்டால் கூடுதல் பணம் தருவதாக வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

'பசித்த பூனை முன் பாலை வைத்த தந்தைதான் குற்றவாளி' -இளம்பெண் கொலை விவகாரத்தில் RSS தலைவர்  கருத்து !

இதனால் ஆத்திரத்தில் இருந்த புல்கித் ஆர்யா மற்றும் ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர், ஊழியர் அங்கித் குப்தா ஆகியோர் குடிபோதையில் ரிசார்ட்டுக்குச் சென்று அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்ளும்படி மிரட்டியுள்ளனர்.இதனால் அந்த பெண் மறுப்புத் தெரிவித்து கூச்சலிட்டுள்ளார் இதனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை மூன்று பெரும் அடித்து கொலை செய்துவிட்டு உடலை அருகில் இருந்த கால்வாயில் தூக்கிப்போட்டுவிட்டு எதுவும் தெரியாததுபோல் நடித்துள்ளனர்.

இதனையடுத்து போலிஸார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ரிசார்ட்டை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்த சம்பவமும் அரங்கேறியது. இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'பசித்த பூனை முன் பாலை வைத்த தந்தைதான் குற்றவாளி' -இளம்பெண் கொலை விவகாரத்தில் RSS தலைவர்  கருத்து !

இதனிடையே இந்த கொலை தொடர்பாக, ராய்ப்பூரைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் விபின் கர்ன்வால், அந்த பெண்ணின் தந்தைதான் குற்றவாளி என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது, அவரின் பதிவில்" பசித்த பூனைகளின் முன் பச்சைப் பாலை வைத்த தந்தைதான் மிகப் பெரிய குற்றவாளி" என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து டேராடூனிலுள்ள ரைவாலா காவல் நிலையத்தில் விபின் கர்ன்வால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories