India
'வெளியே போ'.. பள்ளியை மூட சொன்ன பா.ஜ.க-வினரை விரட்டியடித்த பொதுமக்கள்!
புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தது. மேலும் பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளைத் தொடர்ந்துள்ளது.இதனால் ஆவேசமடைந்த பா.ஜ.கவினர் கடைகளைத் திறந்த உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் உப்பளத்தில் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். உடனே அங்கு வந்த பா.ஜ.கவினர் பள்ளியை மூடுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதற்குப் பள்ளி நிர்வாகம் இன்று தேர்வு நடப்பதால் பள்ளிக்கு விடுமுறை விடமுடியாது என கூறியுள்ளனர்.
இதைப்பார்த்த பெற்றோர்களும், பொதுமக்களும் உடனே 'பள்ளியை விட்டு வெளியே போ, வெளியே போ' என முழக்கம் எழுப்பினர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பா.ஜ.கவினரை பள்ளியிலிருந்து வெளியேற்றினர். இதையடுத்து பள்ளி வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது.
இதனிடையே 5 தமிழ்நாடு அரசு பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் கல்லூரி பேருந்து என 6 பேருந்துகளின் கண்ணாடிகளை இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க-வினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புதுச்சேரி முழுவதும் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க-வினர் காலை முதலே ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மேலும் போலிஸார் உரிய பாதுகாப்பு அளிக்காததால், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!