India
Amazon நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம்.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இணைய தளத்தில் செல்போன் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி அமேசான் தளத்திலிருந்த பிரஷர் குக்கர் ஒன்றை 2265 வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
அப்போதுதான் இந்த பிரஷர் குக்கர் தரமற்றது என்றும் அதில் இந்தியத் தரச் சான்றான BIS இல்லாமல் விற்கப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அமேசான் தளத்தின் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நுகர்வோர் பாதுகாப்பு விதியை அமேசான் நிறுவனம் கடைபிடிக்கவில்லை என கூறி இந்நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
மேலும் தரமற்ற பிரஷர் குக்கர்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் நுகர்வோருக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!