India
மனைவி உயிரோடு இருக்கும்போதே இரண்டாவது திருமணம்.. கணவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் கற்பித்த முதல் மனைவி!
தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஸ்வர்ணபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவர்க்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அகிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்துக்காக ரூ.20 லட்சம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.
திருமணம் முடிந்து சில ஆண்டுகள் கழித்து இருவருக்கும் பிரச்சனை வரத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஸ்ரீகாந்த் தனது மனைவி அகிலாவை பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்த விவகாரத்தை தனது உறவினர் ஒருவர் மூலம் அறிந்த அகிலா தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு கணவரின் புதிய வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும், அங்கிருந்து தனது கணவரை அழைத்துவந்த அவர், கணவரை மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளார்.
பின்னர், கணவரை தொடர்ந்து செருப்பால் அடித்த அவர், செருப்பு மாலை அணிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தெரிந்த நிலையில், அவர்கள் விரைவாக வந்து ஸ்ரீகாந்தை மீட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!