India
உ.பி : பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை.. பழிவாங்க இளைஞர்கள் செய்த கொடூரம்..
உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பள்ளிக்கு போகும் வழியில் சில இளைஞர்கள் இவரிடம் கிண்டல் செய்து தகராறு செய்து வந்துள்ளனர்.
இந்த தகராறு ஒருமுறை முற்றிப்போக கடந்த 2-ம் தேதி அந்த இளைஞர்கள் சிறுமியிடம் தகராறு செய்து வந்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த சிறுமி தினேஷ் யாதவ் என்பவரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். மேலும் கடுமையாக திட்டியுள்ளார். இதனால் பெரும் அவமானமடைந்த தினேஷ் அந்த சிறுமியை பழிவாங்க எண்ணியுள்ளார்.
அதன்படி அவரது நண்பர் அமர்சிங் என்பவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர்கள் வீட்டில் நுழைந்த இளைஞர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு அவரது வாயில் துணியை வைத்து அடைத்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனால் மாணவி அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கமபக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளிகளான தினேஷ் மற்றும் அமர்சிங் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவியின் உடலில் 80% தீ காயங்கள் ஏற்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிறுமியை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுமியிடம் நேற்று வாக்குமூலம் வாங்கி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் இரயில்வே திட்டங்களுக்கான காலக்கெடு என்ன?” : நாடாளுமன்றத்தில் ஆ.இராசா எம்.பி கேள்வி!
-
“VB G RAM G மசோதா என்பது வளர்ச்சி பாரதம் இல்லை, விபரீத பாரதம்!”: நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கண்டனம்!
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!