India
உடைக்கப்பட்ட ஜன்னல்..வீடு புகுந்து மருத்துவர் குடும்பத்தை தாக்கிய நோயாளிகள்.. இதற்கா இப்படி செய்தார்கள் ?
மகாராஷ்டிரா மாநிலம் பாராமதியிலுள்ள சங்கவி என்ற பகுதியில் மருத்துவர் யுவராஜ் கெய்க்வாட் என்பவர் தனது வீட்டின் அருகே கிளினிக் ஒன்றை நடத்திவருகிறார். செப்டம்பர் 6-ம் தேதி அங்கு மருத்துவர் யுவராஜ் தனது குடும்பத்தினருடம் சேர்ந்து வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.
அப்போது, வீட்டின் காதலை சில வேகமாக தட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவரின் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை சிலர் உடைத்துள்ளனர். மேலும் வீட்டின் கதவையும் உடைக்க முயன்றுள்ளனர். பின்னர் மருத்துவர் யுவராஜ் மற்றும் அவரின் மகன் சேர்ந்து கதவை திறந்துள்ளனர்.
அப்போது ஆவேசமாக உள்ளே நுழைந்த கும்பல் மருத்துவரையும், அவரது மகனையும் தாக்கியுள்ளனர். பின்னர் இதுதொடர்பாக மருத்துவர் யுவராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர்கள் நடத்திய விசாரணையில் மருத்துவர் யுவராஜின் கிளினிக்கை திறக்க நேரமானதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் ஆத்திரமடைந்து மருத்துவரை தாக்கியது தெரியவந்தது.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் அனில் ஜக்தாப், விஸ்வஜீத் ஜக்தாப், அசோக் ஜக்தாப், பூஷண் ஜக்தாப் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!