India
காற்றடிக்கும் கருவியால் வந்த வினை.. நண்பன் செய்த செயலால் பறிபோன சக நண்பனின் உயிர் : ம.பி-யில் அதிர்ச்சி !
மத்திய பிரதேச மாநிலம் சாத்னா பகுதியை சேர்ந்தவர் லாலு சிங் தாக்குர் (வயது 25). இவர் அந்த பகுதியிலுள்ள மாவு மில்லில் வேலை செய்து வருகிறார். அவர் வேலையை முடித்ததும் தனது உடலில் இருக்கும் மாவு தூசியை சுத்தம் செய்வார். அதற்காக அங்கிருக்கும் Air Compressor (காற்றடிக்கும் கருவி) பயன்படுத்தி மாவு பெளடரை சுத்தம் செய்வார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலையும் அதே போல், வேலையை முடித்து தனது உடலில் உள்ள மாவை நீக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த லாலுவின் நண்பர் கப்பார் கோல் என்பவர் தான் உதவிசெய்வதாக கூறி அந்த கருவியை வாங்கியுள்ளார்.
அப்போது திடீரெனெ விளையாட்டு போக்கில் லாலுவின் ஆசனவாய்க்குள் அந்த கருவியை புகுத்தி காற்றடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார் லாலு. இதனால் பதறிப்போன அவரது நண்பர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த அவர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் கப்பார் செய்த செயல் பதிவாகியிருந்தது.
இதையடுத்து லாலுவின் நண்பர் கப்பாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டுக்காக நண்பன் செய்த செயல் சக நண்பனின் உயிரை பறித்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இதே போன்றொரு ஏர் கம்பரஷன் பைப்பை வைத்து ஆசனவாயில் நுழைத்து விளையாடியதில் 16 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அதோடு அதே குஜராத்தில் மதுபோதையில் நண்பர்களே சக நண்பரின் ஆசனவாயில் 8 சே.மீ அளவிலான டம்ளரை நுழைந்துள்ள சம்பவம் உள்ளிட்டவை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!