இந்தியா

“அங்கு வைத்தா விளையாடுவார்கள் ?” : ‘ஏர் கம்பரஷர்’ வைத்து விளையாடி சிறுவன் சுருண்டு விழுந்து பரிதாப பலி !

அகமதாபாத்தில் ஏர் கம்பரஷன் பைப்பை வைத்து விளையாடியதில் சிறுவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“அங்கு வைத்தா விளையாடுவார்கள் ?” : ‘ஏர் கம்பரஷர்’ வைத்து விளையாடி சிறுவன் சுருண்டு விழுந்து பரிதாப பலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அகமதாபாத்தில் புதிதாக கட்டட பணி ஒன்று நடைபெற்று வந்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு வேலை நடைபெற்று வந்துள்ளது. இந்த பணிக்காக உத்தர பிரதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்ளிட்ட சிலர் வேலை பார்த்து வந்துள்ளனர்.

அங்கு வேலைக்காக ஏர் கம்பரஷன் பைப் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. சம்பவத்தன்று குல்தீப் என்பவரும் 16 வயது சிறுவனும் அங்கு வேலைபார்த்து வந்துள்ளனர். மதிய உணவுக்காக ஒப்பந்ததாரர் திரிலோசன் கவுதம் என்பவர் அங்கிருந்து சென்ற பின்னர் அங்கிருந்த ஏர் கம்பரஷன் பைப்பை வைத்து இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

“அங்கு வைத்தா விளையாடுவார்கள் ?” : ‘ஏர் கம்பரஷர்’ வைத்து விளையாடி சிறுவன் சுருண்டு விழுந்து பரிதாப பலி !

ஒருவர் மீது ஒருவர் காற்றை அடித்து விளையாடிக்கொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு விசித்திர யோசனை ஒன்று வந்துள்ளது. அதன்படி தங்கள் ஆசனவாய் பகுதியில் காற்றை அடித்து விளையாட முயன்றுள்ளனர். முதலில் குல்தீப் தனது ஆசனவாயில் ஏர் கம்பரஷன் பைப்பை திணிக்க முயன்றுள்ளார்.

ஆனால், அதை செய்யமுடியாததால், 16 வயது சிறுவனின் ஆசனவாய் பகுதியில் ஏர் கம்பரஷன் பைப்பை திணித்து காற்றை அடித்துள்ளார். இதில் சிறுவனின் ஆசனவாய் வழியே காற்று சிறுவனின் உள்ளே சென்றுள்ளது.

“அங்கு வைத்தா விளையாடுவார்கள் ?” : ‘ஏர் கம்பரஷர்’ வைத்து விளையாடி சிறுவன் சுருண்டு விழுந்து பரிதாப பலி !

இதனால் அந்த சிறுவன் உடனடியாக மயக்கமடைந்து சுருண்டு விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குல்தீப் ஒப்பந்தக்காரரிடம் இது தொடர்பாக கூறியுள்ளார். அவர் வந்து பார்த்தும் சிறுவன் எழுந்தரிக்காத நிலையில், சிறுவனை அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதன் பின்னர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனின் மரணத்திற்கு காரணமான குல்தீப் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories