India
அரியானா : பாலியல் அத்துமீறல் : ஓடும் இரயிலில் இருந்து தள்ளி இளம்பெண் கொலை.. குழந்தை கண்முன் நடந்த கோரம் !
ஹரியானா மாநிலம், ரோஹ்டக் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது 9 வயது மகனுடன் தோஹனா என்ற பகுதிக்கு இரயிலில் சென்றுள்ளார். அப்போது இவர் பயணித்த இரயில் பெட்டியில், சிலர் மட்டுமே இருந்துள்ளார். அந்த சமயத்தில் மது போதையில் வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார்.
இதனால் அவரை அந்த பெண் தடுக்க முற்படவே, ஆத்திரப்பட்ட அந்த இளைஞர் அந்த பெண்ணை ஓடும் இரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனை கண்ட பெண்ணின் 9 வயது மகன், அழுதுகொண்டே இருந்துள்ளார். பின்னர் தான் இறங்கும் இடம் வந்ததும் இறங்கிய சிறுவன், அங்கு காத்திருந்த தந்தையிடம் தாய்க்கு நடந்தவற்றை கூறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டதும் பதறிப்போன தந்தை உடனே இரயில்வே காவல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதயடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கீழே வீழ்ந்த அந்த பெண்ணையும், குற்றவாளியையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அந்த பெண்ணை தள்ளிவிட்டவரின் பெயர் சந்தீப் என்றும், பெண்ணை தள்ளிவிட்டவுடன் அவரும் கீழே விழுந்து குதித்து தப்பிக்க முயன்றபோது அவருக்கு காலில் அடிபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து சந்தீப்பை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை முடிந்தவுடன் அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இரயில்வே அதிகாரிகள் இரவு முழுக்க பெண்ணின் உடலை தேடும் பணியில் இருந்தனர். அப்போது அவரது உடல் ஒரு முட்புதரில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நாளை நடைபெறவுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் ? சென்னையில் எங்கு ? விவரம் உள்ளே !
-
திமுக முப்பெரும் விழா... கரூர் அழைக்கிறது வாரீர் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
முதலமைச்சரின் துரித செயல்பட்டால் நேபாளத்தில் இருந்து 116 தமிழர்கள் மீட்பு... உதவி எண்கள் அறிவிப்பு !
-
இந்தியாவில் முடிவுக்கு வரும் தென்மேற்குப் பருவமழை... மழை அதிகமா ? குறைவா? விவரம் உள்ளே !
-
"ஒன்றிய அரசின் அறிவிப்பு கூட்டாட்சிக்கும், மக்களாட்சிக்கும் எதிரானது" - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் !