India
குளியல் வீடியோ எடுத்து மிரட்டல்.. பக்கத்து வீட்டுக்காரர் செயலால் பெண் அதிர்ச்சி -உபி-யில் அரங்கேறிய அவலம்
உத்திரபிரதேச மாநிலம் காலியாபாத் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது பக்கத்து வீட்டில் 32 வயதுடைய இளைஞர் ஒருவரும் வசித்து வந்துள்ளார். அது வாடகை வீடு என்பதால் இரு வீட்டிற்கும் குளியலறை, கழிவறை ஒன்றாக தான் இருக்கிறது.
இந்த நிலையில், அந்த இளைஞருக்கு பணத்தேவை இருந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த அவர், இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை அந்த பெண்ணுக்கு அனுப்பி தனக்கு ரூ.1 லட்சம் கொடுக்கும்படியும், கொடுக்கவில்லை என்றால் வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
முதலில் இவர் மிரட்டலுக்கு பயப்படாத அந்த பெண், பிறகு பயந்து போய் தனக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டுமென்று கேட்டுள்ளார். பின்னர் அவர் சைபர் கிரைம் போலிசை அணுகி புகார் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளியான அந்த இளைஞர் வீட்டிற்கு சென்றனர்.
அங்கே சென்று அவர்கள் விசாரிக்கையில், இளைஞர் தப்பியோட முயன்றுள்ளார். இதையடுத்து அவரை துரத்தி மடக்கி பிடித்த அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய பக்கத்து வீட்டுக்கார இளைஞரின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !