India
'ஒரு வருடம் LIVING..' திருமணம் செய்ய மறுத்த காதலன்.. ஆத்திரத்தில் காதலி செய்த காரியம் !
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள பொவாய் என்ற பகுதியில் ஸொரா ஷா (வயது 32) என்ற இளம்பெண்ணும், ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ரம்ஜான் ஷேக் என்ற நபரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் கடந்த ஓராண்டு காலமாக இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஸொரா ஷா, ஷேக்கிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறி வந்துள்ளார். ஆனால் கொஞ்சம் நாட்கள் கழியட்டும் என்று கூறியுள்ளார். இப்படி பல மாதங்கள் செல்ல ஸொரா ஷா கேட்கும்போதெல்லாம் கால தாமதம் செய்து வந்துள்ளார் ஷேக்.
இதனால் பொறுமை இழந்த ஸொரா ஷா, தனது காதலன் மீது மோசடி புகார் கொடுக்கவுள்ளதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் இருவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் சண்டை ஏற்பட இதில் ஆத்திரமடைந்த ஸொரா ஷா, தனது காதலன் கழுத்தை தனது துப்பட்டாவால் இறுக்க நெரித்துள்ளார்.
இதில் மூச்சு திணறி ஷேக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த ஸொரா ஷா கதறி அழுதுள்ளார். பின்னர் அந்த பகுதியிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஷேக்கின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காவல்நிலையத்தில் சரணடைந்த காதலி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தன்னை திருமணம் செய்துகொள்ள காதலன் தாமதாக்கியதால் ஆத்திரமடைந்த காதலி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
போராட்டம் ஒரு புறம் - ரீல்சிற்காக ஆய்வு மறுபுறம்! : மின்வெட்டிற்கான தீர்வை தட்டிக்கழிக்கிறதா த.வெ.க?
-
கனிமொழி எம்.பி-யின் ஒற்றைப் பதிவு.. சமூக வலைதளங்களில் படு வைரல்!
-
“தவெக பெயரை குறிப்பிடாதது ஏன்?” - பண மோசடியில் சிக்கிய வர்ஷினி வெங்கட் விவகாரத்தில் திமுக கேள்வி!
-
“இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி வகிக்க ஞானேஷ் குமார் தகுதியற்றவர்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
3 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம்.. ஆனால்.. செப். 27 ஞாயிற்றுக்கிழமை இயங்கும்.. நிதியமைச்சகம் அறிவிப்பு!