India
ஆசை ஆசையாக பரோட்டா சாப்பிட்ட இளைஞர்.. தொண்டையில் சிக்கி நண்பன் கண்முன்பே பரிதாப பலி !
கேரள மாநிலத்தில் 34 வயதான இளைஞர் பாலாஜி என்பவர் இடுக்கியில் உள்ள ப்ரோட்டா கடையில் ப்ரோட்டா வாங்கியுள்ளார். பின்னர் தனது பணி முடிந்து உரம் ஏற்றிச் சென்ற நண்பரின் லாரியில் கட்டப்பனாவுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது லாரியில் வைத்து பரோட்டா தின்றுகொண்டிருந்தபோது பரோட்டா திடீரென அவரின் தொண்டையில் சிக்கியுள்ளது. இதில் மூச்சி விட அவர் சிரமப்பட்டுள்ளார். இதை அறிந்த லாரி ஓட்டுநரான அவர் நண்பர் உடனடியாக அந்த பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனாலும், பரோட்டா நன்கு அவர் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சி விட முடியாமல் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பாலாஜிக்கு சாந்தி என்ற மனைவியும், அர்ஜுன், அஸ்வின் என்ற குழந்தைகளும் உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்த போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!
-
“மரியாதையும், பாதுகாப்பான கல்விச்சூழலும் கிடைப்பது குழந்தைகளின் உரிமை!” : கனிமொழி எம்.பி!
-
கிரிக்கெட் விளையாட்டு : பந்து தலையில் தாக்கி 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - காஞ்சியில் அதிர்ச்சி!