உலகம்

80 ஆயிரம் CCTV கண்காணிப்பு கேமராக்களை HACK செய்த மர்மநபர்கள்..உடனடியாக UPDATE செய்ய பயனர்களுக்கு அறிவுரை!

உலகமெங்கும் Hikvision கேமராவில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி 80 ஆயிரம் கேமராக்களில் ஹேக்கர்கள் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

80 ஆயிரம் CCTV கண்காணிப்பு கேமராக்களை HACK செய்த மர்மநபர்கள்..உடனடியாக UPDATE செய்ய பயனர்களுக்கு அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகளவில் பிரபலமான CCTV கண்காணிப்பு கேமரா நிறுவனம் Hikvision. அமெரிக்கா முதல் இந்தியா வரை பல்வேறு நிறுவனங்கள் Hikvision கேமெராவையே பயன்படுத்துகின்றன. சீன நிறுவனமான Hikvision கேமராக்களின் விலை மிக குறைவு என்பதால் அதை வாங்க பல்வேறு தரப்பினர் விரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், உலகமெங்கும் Hikvision கேமராவில் உள்ள பாதுகாப்பு குறைபாட்டை பயன்படுத்தி 80 ஆயிரம் கேமராக்களில் ஹேக்கர்கள் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடு சில மாதங்களுக்கு முன்னரே கண்டறியப்பட்டது.

80 ஆயிரம் CCTV கண்காணிப்பு கேமராக்களை HACK செய்த மர்மநபர்கள்..உடனடியாக UPDATE செய்ய பயனர்களுக்கு அறிவுரை!

அதைத் தொடர்ந்து Hikvision நிறுவனம் செப்டம்பர் 2021 இல் புதிய அப்டேட்டை வெளியிட்டது. இதில் அந்த பாதுகாப்பு குறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டாலும் உலகெங்கும் உள்ள பல நூறு நிறுவனங்கள் அதை புதுப்பிக்கவில்லை.

இதனால் அந்த நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான CCTV கண்காணிப்பு கேமராக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடனடியாக அந்தந்த நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கவேண்டும் என்று Hikvision நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்களை ஹேக் செய்து அதன் உரிமையாளர்களை பணம் கேட்டு மிரட்டல் வந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

80 ஆயிரம் CCTV கண்காணிப்பு கேமராக்களை HACK செய்த மர்மநபர்கள்..உடனடியாக UPDATE செய்ய பயனர்களுக்கு அறிவுரை!

இந்தியாவில் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் Hikvision நிறுவனத்தின் CCTV கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் ராணுவத்தில் அதிமுக்கிய ஆவணங்களை பாதுகாக்கப்படும் இடங்களில் இந்த கேமராக்கள் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்புத்துறை வட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories