India
ஷாப்பிங் அழைத்துச்செல்லாத பெற்றோர்.. விரக்தியில் விபரீத முடிவெடுத்த 11 வயது சிறுமி ! நடந்தது என்ன ?
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த சாமராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு 3 குழந்தைகள் உள்ளன. இதில் மூத்த மகள் வைஷாலி (11). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று வைஷாலியின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடந்தது. இதில் கலந்துகொண்ட வைஷாலியின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.
பின்னர் முன்பே திருவிழாவுக்காக சிறுமி வைஷாலிக்கு புதிய உடை எடுத்துக்கொடுத்ததால் மற்ற 2 குழந்தைகளுக்கும் உடை எடுக்க முடிவுசெய்துள்ளனர். இதனால் வைஷாலியை மட்டும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு மற்ற இரண்டு குழந்தைகளுடன் ஷாப்பிங் செல்ல தயாராகியுள்ளனர்.
அப்போது, நானும் வருகிறேன் என்று வைஷாலி கூறிய நிலையில், அவர் சொல்வதை பொருட்படுத்தாமல் வைஷாலியை வீட்டிலேயே விட்டுவிட்டு ஷாப்பிங் செல்ல கிளம்பி சென்றுள்ளனர். இதனால் வைஷாலி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
பெற்றோர் தன்னை விட்டு தனியே சென்றதால் கடும் வருத்தத்தில் இருந்த அவர் வீட்டில் இருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஷாப்பிங் முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர் தங்களது மகள் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவஇடத்துக்கு வந்த போலிஸார் இது தொடர்பாக வழக்கு பதவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமி வைஷாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
Also Read
-
SWAYAM செமஸ்டர் தேர்வு - அநீதியை உடனே சரிசெய்ய வேண்டும் : ஒன்றிய அமைச்சருக்கு பி.வில்சன் MP கடிதம்!
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!