
மகாராஷ்டிரா மாநிலம் பல்கர் மாவட்டத்தில் வசய் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள நடைமேடையில், பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளுடன் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அண்ட் நடைமேடையின் வழியே ரயில் வந்துகொண்டிருந்தது.
அதை கவனித்த அந்த பெண்ணின் கணவர், திடீரென அவரை நடைமேடையில் இருந்து இழுத்து சென்று, தண்டவாளத்தில் தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் தனது குழந்தைகளை எடுத்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் அந்த பெண்ணின் கணவர் ரயில் நிலையத்தில் இருந்து தப்பி, தாதர் பகுதிக்கு சென்று பின்னர் கல்யான் பகுதிக்கு சென்றதாக தெரியவந்துள்ளது.
கணவர் மனைவிக்கு இடையே நடந்த சண்டையே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணம் என் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை பார்த்த பலரும் அந்த கொடூர கணவரை விமர்சித்து வருகின்றனர்.








