India
"காந்தியை சுட்டு கொன்ற கூட்டம் இது.. என்னை மட்டும் விட்டுவைக்குமா?": சித்தராமையா பேச்சு!
சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்ட சாவர்க்கரை பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தொடர்ந்து விடுதலை போராட்ட வீரர் என சித்தரிக்க முயன்று வருகிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்த சாவர்க்கரை முதன்மை படுத்தி வருகிறது.
அவரின் கருத்துக்களை பல்கலைக்கழக பாடங்களில் இணைக்கவும் முயற்சி மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்துப் பின்வாங்கியது. ஆனாலும் சாவர்க்கரை விடுதலை போராட்ட வீரர், தியாகி என பா.ஜ.க பேசி வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது வெளியிடப்பட்ட மலரில் சாவர்க்கர் படம் இடம் பெற்றது. இதற்கு அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தார். மேலும் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சாவர்க்கர் படம் வைக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து பா.ஜ.க தேசிய செயலாளர் சி.டி.வி ரவி உட்படப் பல தலைவர்கள் சித்தராமையாவை விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று குடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட சித்தராமையா சென்றார். அப்போது அங்கு வந்த பா.ஜ.கவினர் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசினர். மேலும், தங்கள் கூறிய கருத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் , இந்த சம்பவம் குறித்து முன்னாள் முதல்வர் சித்தரா மையா, மகாத்மா காந்தியைக் கொன்றவர்கள் அவர்கள். என்னை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?. காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றார். அவரது படத்தை வணங்கி வழிபடுபவர்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!