தமிழ்நாடு

75 ஆண்டு ’அற்புதம் இந்தியா’வின் சாதனை இதுதான்.. பட்டியலிட்டு ஒன்றிய அரசை விமர்சித்த டி.எம்.கிருஷ்ணா!

75 ஆண்டின் சுதந்திர இந்தியாவில் கூட்டாட்சி முறை கொடூரமான வழிகளில் அழிக்கப்படுகிறது என இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா விமர்சித்துள்ளார்.

75 ஆண்டு ’அற்புதம் இந்தியா’வின் சாதனை இதுதான்.. பட்டியலிட்டு ஒன்றிய அரசை விமர்சித்த டி.எம்.கிருஷ்ணா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராகத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

மேலும் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். ஒன்றிய அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களைப் புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு ஒன்றிய அரசு அடக்கப்பார்க்கிறது.

இந்தியாவில் 75ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடி இருந்த வேலையில் குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணிப் பெண்ணை வன்கொடுமை செய்து, அவர் கையிலிருந்த குழந்தையைக் கொன்ற குற்றவாளிகள் 11 பேரை பா.ஜ.க அரசு விடுவித்துள்ளது இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே போராடி பெற்ற சுதந்திரத்தை பறிக்கும் வகையிலேயே தனது ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தி வருவதாகவே அதன் நடவடிக்கைகள் இருந்து வருகிறது என எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கொலைகாரர்களையும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களையும் அரசு விடுவிக்கிறதுதான் சாதனையா என கேள்வி எழுப்பி ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார் இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.

இது குறித்து டி.எம்.கிருஷ்ணா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "75ம் ஆண்டில் இந்தியா.. சாதனைகளின் முடிவுறா பட்டியல்!

1) பி.எம். கேர்ஸ் நிதி வெளிப்படையாக்கப்படவில்லை.

2) தேர்தல் பத்திரங்கள் மர்மமாக இருக்கின்றன.

3) கொலைகாரர்களையும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களையும் அரசு விடுவிக்கிறது.

4) முன்னேற்பாடு செய்யப்படாத பத்திரிகையாளர் கேள்வி பிரதமரிடம் கேட்கப்பட்டதில்லை (பத்திரிகையாளர் சந்திப்பு கிடையாது).

5) பத்திரிகையாளர்கள், அரசாங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்கள்.

75 ஆண்டு ’அற்புதம் இந்தியா’வின் சாதனை இதுதான்.. பட்டியலிட்டு ஒன்றிய அரசை விமர்சித்த டி.எம்.கிருஷ்ணா!

6) மத்தியப் புலனாய்வு நிறுவனம் அன்றாடம் எதிர்கட்சிகளை வேட்டையாடுகிறது.

7) ஆட்கொணர்வு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிப்பதில்லை.

8) பகிரங்கமாக பாஜக ஆட்சியை அபகரிக்கிறது (தேர்தல்களில் வெற்றி பெறத் தேவையில்லை)

9) கூட்டாட்சி முறை கொடூரமான வழிகளில் அழிக்கப்படுகிறது.

உச்சமாக, ‘மக்களாகிய நாம்’ இவை எல்லாமும் இயல்புதான் என நினைக்கிறோம். ‘அடுத்தவர் மட்டும் செய்தாரா’ என்பது மட்டுமே நியாயப்படுத்துவதற்கான வாதமாக இருக்கிறது. அற்புதம் இந்தியா" என தெரிவித்துள்ளார். இதையடுத்து டி.எம். கிருஷ்ணா ட்விட்டர் பதிவைப் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories