India

ஒன்றிய அரசின் முடிவால் இருளில் மூழ்கப் போகும் 13 மாநிலங்கள்.. என்ன காரணம்?

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மின்சார சட்டத் திருத்த மசோதாவை மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தாக்கல் செய்தார். இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.

மேலும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படும். அதேபோல் மின்சார மானியத்திற்கும் பாதிப்பு உள்ளது. இப்படி தமிழ்நாடு போன்று அனைத்து மாநிலங்களின் மின்சார உரிமைகளில் ஒன்றிய அரசு தலையிடும் அபாயம் உள்ளது என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டின.

இந்நிலையில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகையைக் கட்டாததால் தமிழ்நாடு உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு மின்சாரம் வாங்க, விற்கத் தடை வித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசின் பவர் சிஸ்டம்ஆபரேஷன் கார்ப்பரேஷனின் தலைவர் எஸ்.ஆர்.நரசிம்மன் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ஜார்கண்ட், ஆந்திரா, ஜெய்ப்பூர், சத்தீஷ்கர், ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தடை வித்துள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவால் 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநில அரசுகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Also Read: பில்கிஸ் பானு வழக்கு : குற்றவாளிகளை விடுவிக்கும் குழுவில் பாஜக MLA-க்கள் ! -வெளிவந்த தகவலால் அதிர்ச்சி !