India
ஆசிரியரை தீ வைத்து எரித்த கும்பல்.. காப்பாற்றாமல் வீடியோ எடுத்த பொதுமக்கள்.. மரணித்த மனித நேயம் !
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனிதா ரீகர் (வயது 32). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றபோது அவரை ஒருகும்பல் வழிமறித்துள்ளது.
பின்னர் அவரை சூழ்ந்த அந்த கும்பல் அவரை தாக்கி அவர் மீது பெட்ரோலை ஊற்றி அவரை உயிரோடு எரித்துள்ளனர். மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், சுற்றிலும் இருந்தவர்கள் அவரை காப்பாற்றாமல் தங்கள் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த சிலர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு 70 % தீக்காயம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். சுமார் ஒரு வாரம் சிகிச்சை பெற்றுவந்த அவர் அது பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தினர். அதில், கொடுத்த கடனை ஆசிரியர் திரும்பக்கேட்டதால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஒருவர் எரித்துக்கொன்றது தெரியவந்தது.
இதன் பின்னர் அதில் மூன்று பேரை போலிஸார் கைது செய்த நிலையில், மீதம் இருப்பவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?