India
ரூ.17 லட்சம் மதிப்புள்ள Cadbury Chocolate திருட்டு: சிசிடிவி கேமராவையும் கையோடு எடுத்து சென்ற கும்பல்!
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ அருகே சின்ஷாட் பகுதி உள்ளது. இங்கு சாக்லேட் குடோன் ஒன்று உள்ளது. இதன் உரிமையாளராக ராஜேந்திர சிங் சித்து என்பவர் உள்ளார்.
இந்நிலையில், சாக்லேட் குடோனில் இருந்து ரூ.17 லட்சம் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருடர்கள் குறித்து தகவல்களைப் பொதுமக்கள் தெரிவித்து உதவ வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்துக் கூறிய குடோன் உரிமையாளர் ராஜேந்திரன், "குடோனுக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் செல்போனில் தொடர்பு கொண்டு கதவு உடைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இதையடுத்து அங்குச் சென்றுபார்த்தபோது குடோனில் இருந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள சாக்லேட்டுகள் திருடப்பட்டிருந்தது தெரிந்தது. மேலும் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்" என தெரிவித்துள்ளார். ரூ.17 லட்சம் மதிப்புள்ள கேட்பரி சாக்லேட்டை மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !