India
நாட்டின் 13 தங்க சுரங்கங்களை தனியாருக்கு விட திட்டம் .. ஒன்றிய அரசின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு !
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.
குறிப்பாக, பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.
இதன் தொடக்கமாக கடந்த 2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்தார்.அதன்படி அரசிடம் இருந்த 4.99 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து எல்.ஐ.சி.யின் பங்குகள் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிலையில், 2 மாதத்தில் பங்குகளில் விலை 30 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இதனால் பங்குசந்தையில் பட்டியலிடப்படும்போது எல்.ஐ.சி.யின் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது அதன் மதிப்பு ரூ.4.8 லட்சம் கோடியாக சரிந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது நாட்டில் உள்ள தங்க சுரங்கங்களை தனியாருக்கு கொடுக்க ஒன்றிய அரசு முடிவுசெய்திருப்பதாக PTI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சுரங்கசட்டம் திருத்தம் செய்யப்பட்டு சுரங்கங்களை தனியாருக்கு ஒன்றிய அரசு திறந்து விட்டது. அதனபடி 45 கணிம சுரங்கங்கள் இதுவரை தனியாருக்கு கொடுப்பட்டுள்ளன.
அதைத் தொடர்ந்து 13 தங்க சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடப்படவுள்ளது. இதில் பெரும்பாலான தங்க சுரங்கங்கள் உத்தர பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ளன. இப்படி விற்பனை செய்யப்படும் வருவாயில் ஒருபகுதி அந்தந்த மாநில அரசுக்கும் கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!