India
பிரபல பாடகர் மீது இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்.. ஆடை வடிவமைப்பாளரின் புகாரால் பரபரப்பில் பாலிவுட் !
மும்பையில் வசித்து வரும் இளம் பெண் இளம்பெண் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் பாலிவுட் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான ராகுல் ஜெயின் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில், ராகுல் ஜெயின் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியதாகவும், அதில் தனது ஆடை வடிவமைப்பு பணிகளை வெகுவாக பாராட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது திறமையால் தனது தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக நியமிப்பதாக ராகுல் ஜெயின் வாக்குறுதி கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சம்பவத்தன்று தன்னை மும்பை அந்தேரி பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்ததால் அவரை சந்திக்க சென்றதாகவும், அப்போது வீட்டை சுற்றிக் காட்டுகிறேன் என்று கூறி தன்னை படுக்கை அறைக்கு சென்றதாகவும் கூறியுள்ளார். அங்கு சென்றதும் கதவை அடைத்த அவர் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், அதை நான் எதிர்த்தபோது என்னை கடுமையாக தாக்கியதாகவும், இதன் பின்னர் ஆதாரங்களை அவர் அழிக்க முயற்சி செய்வதால் அவர் மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை பாடகர் ராகுல் ஜெயின் மறுத்துள்ளார். இது பொய்வழக்கு என்றும் அந்த பெண் யார் என்பதே எனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். பாடகர் ராகுல் ஜெயின் மீது, பாலியல் பலாத்காரம், தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர் மீது இன்னும் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த தகவல் வெளியாகி பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!