India
ஆற்றில் தள்ளி காதலியை கொலை செய்த காதலன்.. வாலிபர் வாக்குமூலத்தைக் கேட்டு போலிஸ் ஷாக்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மலபார் ஹில் பகுதியைச் சேர்ந்தவர் அங்கிதா எஸ் ஷிவ்கன். இளம் பெண்ணான இவர் ஜூலை 31ம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அங்கிரா எஸ் ஷிவ்கன் பயந்தரில் உள்ள பகுதியில் சடலமாக போலிஸார் கண்டெடுத்தனர்.
இதையடுத்து அவரை யார் கொலை செய்தது என போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர். மேலும் அவரின் செல்போன் அழைப்புகளை போலிஸார் ஆய்வு செய்தபோது அபிஷேக் சர்பரே என்பவருடன் அவர் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் போலிஸார் விசாரணை செய்தபோது அங்கிதா எஸ் ஷிவ்கனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அபிஷேக் சர்பரேவும், அங்கிதா எஸ் ஷிவ்கனும் காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து இவர்களது திருமணம் குறித்து பேச்சு வந்தபோது எல்லாம் காதலர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று ஜூலை 31ம் தேதி இருவரும் பயந்தருக் என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த ரயில்வே மேம்பாலத்தில் இருவரும் சென்றுகொண்டிருந்தபோது மீண்டும் திருமணம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. இதனால் இருவருக்கும் சண்டை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் சர்பரே காதலி அங்கிதா எஸ் ஷிவ்கனுவை பாலத்திலிருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியைக் காதலனே கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உலகத்திலேயே முதன்முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம்!” : உதயநிதி பெருமிதம்!
-
தமிழ்நாட்டில் சூரிய மின்சக்தி பூங்காக்கள் அமைக்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் ஆ.மணி MP வலியுறுத்தல்!
-
பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலம் கோட்டத்திற்கு மாற்றுவது எப்போது : திமுக MP ஈஸ்வரசாமி கேள்வி!
-
ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்திற்கு பதில் சொல்ல முடியாது : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
வாடகை வீட்டில் பெண்களுக்கு Scan.. கருவின் பாலினம் குறித்து கூறி வந்த பெண் உள்பட 3 பேர் சேலத்தில் கைது!