India
ஆந்திர முதல்வரின் தாய் சென்ற காரின் இரண்டு டயர்களும் வெடித்ததால் அதிர்ச்சி.. ஓட்டுநரால் நடந்த அதிசயம் !
ஆந்திர மாநில முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி இருந்து வருகிறார். இவரது தந்தை மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் நெருங்கிய நண்பர் அய்பாபுரெட்டியின் குடும்பம் கர்னூலில் வசித்து வருகிறது .
தனது தந்தை அய்பாபுரெட்டியின் நண்பர் குடும்பத்தை சந்திக்க ஜெகன் மோகன் ரெட்டியின் அம்மா விஜயம்மா கர்னூலுக்கு சென்றுள்ளார் .
அவர்களை சந்தித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் ஐதராபாத்துக்கு சென்றுக்கொண்டிருந்தபோது அவர் சென்ற காரின் இரண்டு டயர்களும் ஒரே சமயத்தில் வெடித்துள்ளன.
இதனால் இவர்கள் சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் அங்கும் இங்கும் தாறுமாறாக சென்றது. பின்னர் சிறிது நேரத்துக்கு கார் ஓட்டுனர் சாமர்த்தியமான செயல்பட்டு காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதில் காரில் பயணம் செய்த ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்து சில நேரங்களுக்கு பிறகு வேறு கார் வரவழைக்கப்பட்டு முதல்வரின் தாயார் ஆகியோர் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also Read
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
பிராட்வேயில் ரூ.23 கோடியில் “முதல்வர் படைப்பகம் & நவீன நூலகம்”... அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர்!