India
மூட நம்பிக்கையின் உச்சம்.. அருந்ததி படத்தைப் பார்த்து மறுபிறவி எடுக்க நினைத்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்!
கர்நாடக மாநிலம், துமகூறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். இளைஞரான இவர் அதிகமாகத் திரைப்படங்களைப் பார்த்து வந்துள்ளார். மேலும் அந்த படங்களில் தனக்குப் பிடித்த கதாபாத்திரங்களைப்போற்று பாவித்துக் கொள்வது இவரது வழக்கமாக இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் நடிகை அனுஷ்கா நடித்த அருந்ததி படத்தை சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 5 முறைப் பார்த்துள்ளார். அந்த படத்தில் அனுஷ்கா உயிரிழந்து மீண்டும் மறுபிறவி எடுத்து வருவார். இந்த காட்சியைப் பார்த்த அவர் இது உண்மை என நம்பியுள்ளார்.
இதையடுத்து தானும் மறுபிறவி எடுக்கப்போவதாக உறவினர்களிடம் கூறிவந்துள்ளார். இந்நிலையில் தனது தந்தை கண்முன்னே 'நான் மறுபிறவி எடுப்பேன்' என கூறி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதில் ரேணுகா பிரசாத் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!