India
ஆந்திர முதல்வரின் தாய் சென்ற காரின் இரண்டு டயர்களும் வெடித்து விபத்து.. திட்டமிட்ட தாக்குதலா என சர்ச்சை?
ஆந்திர மாநில முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன் மோகன்ரெட்டி இருந்து வருகிறார். இவரது தந்தை மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் நெருங்கிய நண்பர் அய்பாபுரெட்டியின் குடும்பம் கர்னூலில் வசித்து வருகிறது .
தனது தந்தை அய்பாபுரெட்டியின் நண்பர் குடும்பத்தை சந்திக்க ஜெகன் மோகன் ரெட்டியின் அம்மா விஜயம்மா கர்னூலுக்கு சென்றுள்ளார் .அவர்களை சந்தித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் ஐதராபாத்துக்கு சென்றுக்கொண்டிருந்தபோது அவர் சென்ற காரின் இரண்டு டயர்களும் ஒரே சமயத்தில் வெடித்துள்ளன.
இதனால் இவர்கள் சென்ற கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் அங்கும் இங்கும் தாறுமாறாக சென்றது. பின்னர் சிறிது நேரத்துக்கு கார் ஓட்டுனர் சாமர்த்தியமான செயல்பட்டு காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதில் காரில் பயணம் செய்த ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்து சில நேரங்களுக்கு பிறகு வேறு கார் வரவழைக்கப்பட்டு முதல்வரின் தாயார் ஆகியோர் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதல்வர் சென்ற காரில் வெடித்த இரண்டு டயரும் பஞ்சராகியுள்ளது ஆய்வுக்கு பின்னர் தெரியவந்தது. அதோடு இந்த புதிதாக வாங்கப்பட்டது என்றும் அதனால் அதன் கார் டையர் வெடிக்க வாய்ப்பே இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்த ஒன்றா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மாநில போலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது தெலுங்கானா அரசியலில் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயார் கவனம் செலுத்திவரும் நிலையில், இது போன்ற சம்பவம் நடந்துள்ளது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!