India
மாணவிக்காக மோதிக்கொண்ட 5 மாநில மாணவர்கள்.. கலவரமான பல்கலைக்கழகம் ! சம்பவத்தின் பின்னணி என்ன ?
கர்நாடக மாநிலம் கலபுர்கி பகுதியில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியை சேர்ந்த ஒரு மாணவியை ஒரு கும்பல் கேலி செய்துள்ளது.
இதை அந்த மாணவி சக மாணவர்களிடம் தெரிவிக்க, ஆத்திரப்பட்ட அவர்கள் ஹாஸ்டலில் இருந்தபோது கேலி செய்த கும்பலை சரமாரியாக தாக்கினர். பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்தபோது, தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் டெல்லி, பஞ்சாப், மகாராஷ்டிரா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், மாணவியை கிண்டல் செய்ததால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!