India
தோழியோடு நெருங்கிய உறவு.. கண்டித்தும் கேட்காததால் உறவினரை வெட்டிக்கொன்ற இளைஞர்.. டெல்லியில் அதிர்ச்சி !
டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் 22 வயது இளைஞரை சிலர் வெட்டி விட்டு தப்பியோடினர். அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உயிரிழந்தவர் பீகாரில் உள்ள பூர்ணியா பகுதியைச் சேர்ந்த அன்வருல் ஹக் என்பது தெரியவந்தது.
பின்னர் கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்த CCTV காட்சிகளை வைத்து போலிஸார் சோதனை நடத்தினர். அதில் இருவர் மீது போலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் பெயர் அதின் மற்றும் அஹ்சன் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இந்த கொலைக்கு அபு உஸ்மான் என்பவரே முக்கிய காரணமாக இருந்துள்ளார். உயிரிழந்த அன்வருல் ஹக் அபு உஸ்மானின் தோழியுடன் நெருங்கிய தோழியுடன் நெருங்கிய உறவில் இருந்துள்ளார்.
இது குறித்து அபு உஸ்மான் அன்வருல் ஹக்கிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதன் பின்னரும் அன்வருல் ஹக் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் ஆத்திரமடைந்த அபு உஸ்மான் மீண்டும் அன்வருல் ஹக்கை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அப்போது இந்த விவாதம் அடிதடியாக முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபு உஸ்மான் தான் வைத்திருந்த கத்தியால் ஹக்கினை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதற்கு அதின் மற்றும் அஹ்சன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
அதோடு உயிரிழந்த அன்வருல் ஹக் வசித்த பகுதியில் மேலும் மூவருக்கு இந்த கொலையில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் அனைவரும் அன்வருல் ஹக்கின் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ்-க்கு என்ன ஆனது? : ICU-ல் சிகிச்சை!
-
சென்னையில் 4.09 லட்சம் பேருக்கு உணவு! : தமிழ்நாடு அரசின் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?
-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு தயார் : களத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தி.மு.க - காங்கிரஸ் உறவு நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!