India
பள்ளிக்குச் சென்ற சிறுவன்.. விரட்டி விரட்டி துரத்திய தெரு நாய்கள்: காரணம் என்ன?
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் தெருநாய்கள் அதிக அளவு சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால் அப்பதி மக்கள் மற்றும் சுற்றுலாத்துறையினருக்குப் பெரிய அச்சமாக உள்ளது.
இதனால் தெருநாய்களைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்குச் சென்ற சிறுவனைத் தெருநாய்கள் துரத்திய சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருபட்டினம் பெரிய மரக்கையார் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வந்து கொண்டிருந்த சிறுவனை மூன்று நாய்கள் கடிப்பதுபோல் துரத்தியுள்ளது.
இதனால் பதற்றமடைந்த சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளார். இருப்பினும் தெரு நாய்கள் சிறுவனை விடாமல் துரத்தியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் நாயைக் கல்லால் அடித்துத் துரத்தியுள்ளனர்.
இது சம்மதமான வீடியோவும் வெளியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து உடனே தெருநாயைப் பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!