India
பா.ஜ.க MP-க்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்த டெல்லி போலிஸ்: மன்னிப்பு கேட்ட மனோஜ் திவாரி!
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுதந்திர தினத்தைப் பெருமையாகக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளையும் பா.ஜ.க வினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மையில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்கள் DP-யாக தேசிய கொடியை வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து பிரதமரும் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தேசியக் கொடியை DP-யாக வைத்துள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க-வினர் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசியக் கொடி ஏந்தி இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனர். இதில் நாடாளுமன்ற பா.ஜ.க எம்.பி-க்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து டெல்லி போலிஸார், ஹெல்மெட், லைசன்ஸ், ஒழுங்கான நம்பர் பிளேட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதாக பா.ஜ.க எம்.பி மனோஜ் திவாரிக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு மன்னிப்பு கேட்பதாகவும், இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என கேட்டுக் கொள்வதாக மனோஜ் திவாரி ட்விட் செய்துள்ளார். மேலும் போலிஸாரின் அபராத தொகையைச் செலுத்துவதாகவும் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
Also Read
-
பழனிசாமிக்கே தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கை மீது சந்தேகம் இருக்கிறது - அம்பலப்படுத்திய முரசொலி !
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!