India

ஒரே மாதத்தில் 22 லட்ச இந்திய வாட்சப் கணக்குகள் முடக்கம்.. அதிரடி காட்டிய வாட்சப் நிறுவனம் !

முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்டம்) விதிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு கொண்டு வந்தது.

இந்த விதிகளில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக வலைதள நிறுவனங்கள், சமூக வலைதள புகார்கள் குறித்தும், அவற்றின் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மாதந்தோறும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்த அறிக்கைகளை வாட்சப் நிறுவனம் மாதந்தோறும் இந்திய அரசிடம் சமர்ப்பித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் மட்டும் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி சுமார் 22.10 லட்ச வாட்சப் பயனாளர்களின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வாட்சப் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்படி விதிமீறல்கள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையிலும் விதிமீறல்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் கணக்குகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 18.05 லட்ச கணக்குகளையும், ஏப்ரல் மாதம் 16 லட்ச கணக்குகளையும், மே மாதம் 19 லட்ச கணக்குகளையும் விதிகள் மீறல்கள் புகாரின் அடிப்படையில் முடக்கிய வாட்சப் நிறுவனம் ஜூன் மாதம் 22 லட்சத்து 10 ஆயிரம் வாட்சப் கணக்குகளை முடக்கியுள்ளது இந்தியர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இரயில் மோதி மாணவி உயிரிழப்பு.. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் - கர்நாடகாவில் பரபரப்பு !