India
இந்த மாற்றத்தை கவனித்தீர்களா? -சத்தமில்லாமல் இந்திக்கு எதிராக புரட்சியை ஏற்படுத்திய தென் மாநிலங்கள் !
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஜூலை 18ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து அவைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி மொத்தம் 23 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை தொடர்ந்து அவர்கள் மீதான நடவடிக்கை திரும்ப பெறப்பட்டு விவாதம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சத்தமில்லாமல் இந்திக்கு எதிராக புரட்சியை தென் மாநிலங்கள் செய்து வருகின்றன. இதற்கு முன் பெரும்பாலும் ஹிந்தி தெரிந்த எம்.பிக்கள் தங்கள் வாதத்தை ஹிந்தியிலே பேசுவார்கள்.
இதற்கு ஆங்கிலம் தெரிந்த ஒன்றிய அமைச்சர்களும் ஹிந்தியிலே பதிலளிப்பார்கள், ஆனால், இந்த முறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் மாநில எம்.பிக்களும் மேற்கு வங்க மாநில எம்.பிக்களும் தங்கள் வாதத்தை ஆங்கிலத்திலோ, அல்லது அவர்கள் தாய் மொழியிலோ எடுத்துக்கூறி வருகின்றனர்.
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிலையில், இது வரை மக்களுக்கு புரியாத ஹிந்தியில் பேசி வந்த எம்.பிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஹிந்தி பேசாத மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வழக்கம் போல இதற்கும் ஒன்றிய அமைச்சர்கள் ஹிந்தியிலே பதில் சொல்லி வருவது மட்டும் மாறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையும் விரைவில் மாறும் என நாம் நம்பலாம். ஆனால் ஹிந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடக்கும் இந்த மறைமுக போர் தென்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!