India
ஆந்திர முன்னாள் முதல்வர் NTR மகள் திடீர் தற்கொலை.. முதற்கட்ட விசாரணையில் போலிஸார் சொன்னது என்ன?
ஆந்திரப் பிரதேசம் ஹைதராபாத் ஜூப்ளிஹில்ஸில் பகுதியில் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டிலிருந்த சிகிச்சை எடுத்துவந்த உமா மகேஸ்வரி இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தும் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஜூப்ளிஹில்ஸ் பகுதி காவல் ஆய்வாளர், போலிஸார் நடத்திய முயற்கட்ட விசாரணையில் இதுவொரு தற்கொலை. விசாரணைக்கு பின்னர் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவரும் எனத் தெரிவித்துள்ளார். என்.டி.ஆர். மகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
யாருக்காக செயல்படுகிறார் மோடி? : வரியை மீறி ரசியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கும் இந்தியா!
-
“பிற்போக்குத்தனமான ஒரு இயக்கம் உள்ளது என்றால் அது RSS தான்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்!
-
“இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர்” - துணை முதல்வர் புகழாரம்!
-
9 நாட்கள் சூரிய சக்தி தொழில் முனைவோர் குறித்த பயிற்சி.. எங்கு? எப்போது? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!