India

வீரர்களை திரும்பி வர சொன்ன பாகிஸ்தான் அரசு.. ஆசை ஆசையாய் வந்த வீரர்கள் நாடு திரும்பிய சோகம்: காரணம் என்ன?

44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர், நேற்று காலை புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர்.

அவர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசு அதிகாரிகளும், ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் வரவேற்றனா். பின்பு அவர்களை சொகுசு வாகனங்களில், அவா்கள் தங்கும் இடமான, சென்னை ஓஎம்ஆர் சாலை சிறுசேரியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவர்கள் 19 பேரும் நேற்று இரவு திடீரென சிறுசேரி நட்சத்திர விடுதியில் இருந்து சொகுசு வாகனங்களில் புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனா். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புனே செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவர்கள் புனேவுக்கு திரும்பி சென்றனர். அவா்களை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனா்.

இது சம்பந்தமாக விசாரித்த போது, பாகிஸ்தான் நாட்டு அரசு, அவர்களை செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும், எனவே அவர்கள் செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது.

Also Read: “MPக்களை சஸ்பெண்ட் செய்வது ஆரோக்கியமான ஜனநாயகம் அல்ல”: மோடி அரசுக்கு எதிராக மக்களவையில் கொந்தளித்த ஆ.ராசா