India
வேறு ஆண்களுடன் பேசியதால் ஆத்திரம்.. காதலனால் காதலிக்கு நேர்ந்த கொடூரம்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியைச் சேர்ந்தவர் மனிஷா ஜெய்ஸ்வார். இளம் பெண்ணான இவர் சில ஆண்டுகளாக அகிலேஷ் குமார் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனிஷா ஜெய்ஸ்வார் வேறு சில ஆண்களுடன் பேசி பழகிவந்துள்ளார். இதனால் காதலிமீது அகிலேஷ் குமாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இது குறித்துக் கேட்பதற்காகக் காதலன் காதலி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அகிலேஷ் குமார் அங்கிருந்த கத்தியை எடுத்து காதலி மணிஷா ஜெய்ஸ்வரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் மணிஷா ஜெய்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் காதலியைக் கொலை செய்த காதலன் அகிலேஷ் குமாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!