India
சிறுமியை மிரட்டி 1 மாதமாக கூட்டு பாலியல் வன்கொடுமை.. கொலை குற்றவாளியின் வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் !
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியை அடுத்த ஒரு கிராமத்தில் 11 வயதில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவரது பெற்றோர்கள் கூலி வேலை பார்த்து வரும் நிலையில், சிறுமியை வீட்டில் தனியே விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த மாதம், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான ரோஷன் (வயது 29) என்ற இளைஞர், சிறுமியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். மேலும் அவருக்கு சில பொருட்களும், பணமும் தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் ரோஷன்.
சிறுமியை உள்ளே அழைத்து சென்றவுடன் அங்கே ரோஷனின் நண்பர்கள் கும்பலாக இருந்தனர். இதனால் பதற்றமடைந்த சிறுமி வெளியே வர முயன்ற போது, அவர்கள் அவரை விடவில்லை. ரோஷன் மற்றும் அவரது நண்பர்கள் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் சிறுமியிடம் பணத்தை கொடுத்து, இதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளனர்.
இதனால் பயந்த அந்த சிறுமி, வெளியில் சொல்லாமல் இருந்ததால், சில நாட்களிலேயே ரோஷனின் 3 நண்பர்கள் மீண்டும் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்ட 40 வயதுமிக்க நபர் ஒருவரும், அந்த சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து ஒரு கொலை வழக்கில் ரோஷனை கைது செய்த காவல்துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும் வாக்குமூலமாக அளித்தார். ரோஷனின் வாக்குமூலத்தின் படி, அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயதுமிக்க கஜனன் என்ற நபருடன் சேர்த்து மொத்தம் 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 வயது சிறுமியை 1 மாதகாலமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 9 பேரின் செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!