India
ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் - காங்கிரஸ் MP ஜோதிமணியின் ஆடை 2-வது முறை கிழிக்கப்பட்டதால் அதிர்ச்சி!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஜூலை 18ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய நாளிலிருந்தே எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
ஆனால் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசைக் கண்டித்து அவைக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி மொத்தம் 23 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் சண்முகம், என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், கனிமொழி என்.வி.என்.சோமு ஆகிய 4 பேரும் அடங்குவர்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நடந்துகொள்ளும் விதத்தை கண்டித்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதை கண்டித்தும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக செல்ல முயன்றபோது, காவல்துறையினர் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டு ஜோதிமணி கூறுகையில், எத்தனை முறை தங்கள் மீது அடக்கு முறையை ஏவினாலும் மீண்டும் மீண்டும் மக்களுக்காக போராடிக் கொண்டே இருப்போம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வரும் நிலையில் பலரும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து வருகின்றனர்.
Also Read
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!