India
பிரபல நடிகை மற்றும் அவரது கணவருக்கு Instagram பக்கம் மூலம் கொலை மிரட்டல் : தீவிரமாக தேடும் மும்பை போலிஸ்!
பாலிவுட் சினிமா உலகில் புகழ்பெற்ற தம்பதிகளான வளம் வருபவர்கள் விக்கி கவுசல் மற்றும் கத்ரீனா கைப். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் காதலித்துக் கொண்டிருந்தபோது இவர்கள் காதல் பற்றிய செய்திகள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் செய்தியாக வெளியாகி பேசுபொருளாக இருக்கும்.
தங்களின் காதலை வெளிப்படையாகச் சொல்லாமல் இருவரும் மறுத்துவந்த நிலையில் கடந்த ஆண்டு விக்கி மற்றும் கத்ரீனா கைப் திருமணம் செய்து கொண்டனர். இது அவர்களது ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகர்களையே ஆச்சரியப்பட வைத்தது.
இதையடுத்து இருவரும் சேர்ந்து தங்களின் சமூக ஊடக பக்கத்தில் ஜோடியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் விக்கி, சாண்டாக்ரூஸ் காவல்நிலையத்தில் மர்மநபர் குறித்து புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் பாலிவுட் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி நடிகர்களுக்குக் கொலை மிரட்டல் விடுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம் கான் ஆகியோருக்கும் சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!