India
காதலிக்க மறுத்த சிறுமி.. ஆத்திரத்தில் தீ வைத்து எரித்து கொலை செய்த திருமணமான நபர்.. ஒடிசாவில் அதிர்ச்சி!
ஒடிசா மாநிலத்தின் பாலசோர் பகுதியில் தயாநிதி ஜெனா (வயது 27) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார்.
இந்த டியூசனுக்கு அந்த பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் வந்துள்ளார். தினசரி அவர் படிக்க வந்த நிலையில் அவரின் மீது தயாநிதி ஜெனாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அந்த பள்ளி மாணவியிடம் அவர் காதலை தெரிவித்துள்ளார்.
டியூசன் டீச்சரின் கணவர் தன்னை காதலிப்பதாக கூறியதைக் கேட்ட மாணவி அதிர்ச்சியடைந்து அதனை மறுத்துள்ளார். அதோடு தொடர்ந்து டியூசன் செல்வத்தையும் நிறுத்தியுள்ளார். மாணவியின் இந்த செயலால் தயாநிதி ஜெனா கோவத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று அந்த மாணவி அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வந்த தயாநிதி ஜெனா மாணவியை மறித்து வலுக்கட்டாயப்படுத்தி ஆள் அரவமற்ற கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை அந்த மாணவியின் மீது ஊற்றி அவர் மீது தீ பற்ற வைத்துள்ளார். உடலெங்கும் தீப்பரவிய நிலையில் மாணவி அலறி துடித்த நிலையில் அலறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து மாணவி உடலில் பரவிய தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
ஆனால் அதற்குள் உடல் கருகிய நிலையில் மாணவி அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். அதே நேரம் தயாநிதி ஜெனாவும் தான் வைத்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் ஒரிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
-
மகளிருக்கு ரூ.1000 : திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றும் கேரளம்!
-
தமிழ்நாட்டின் கடல்சார் வர்த்தகத்தை உலகளவில் மேம்படுத்தி வருகிறோம்! : மும்பையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!