India

புனித நதியில் நீர் அருந்திய பஞ்சாப் முதல்வர்..உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் சோகம்!

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்ற நிலையில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் நீண்ட நாள் காதலியான டாக்டர் குர்ப்ரீத் கவுருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் பகவந்த் மானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி பிரச்னை இருந்ததால் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

தற்போதைய நிலையில் அப்போலோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

இதனிடையே பகவந்த் மானுக்கு ஏற்பட்ட தொற்றுக்கு காரணம் ஆற்றுநீரை அவர் பருகியதே என்பது தற்போது தெரியவந்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்னர் பஞ்சாபின் புனித நதியாக கருதப்படும் காளி பெய்ன்க்கு சென்றிருந்த பகவந்த் மான் அந்த நதியின் நீரை புனிதமாக கருதி பருகினார்.

இதன்காரணமாகவே அவருக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: "தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் இல்லை, நிதி ஒதுக்கீடும் இல்லை" -ஒன்றிய அரசின் பதிலால் அதிர்ச்சி !