India
தண்டவாளத்தில் விழுந்த நபர்.. துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய போலிஸ் - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!
கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஆர்.புரத்தில் உள்ள இரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென அங்கேயே விழுந்தார். இதனைக்கண்ட இரயில்வே காவல்துறையினர், பதறியடித்து அந்த நபரை தூக்கினர்.
இரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், இரயில் வருவதை அறிந்து மேலே ஏற முயற்சித்துள்ளார். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த நபரை அங்கிருந்த அதிகாரிகள் உடனடியாக செய்லபட்டு மேலே இழுத்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து இரயில்வே காவல்துறையினர் தெரிவிக்கையில், "சம்பவம் நடந்த நாளன்று காலை சுமார் 10.30 மணியளவில், சென்னை - மைசூரு சதாப்தி விரைவு வண்டி சென்றது. இந்த இரயில் கே.ஆர்.புரத்தில் நிற்காமல் செல்லும் விரைவு இரயிலாகும். இதன் வருவதை அறிந்து இரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், திடீரெனெ கீழே விழுந்தார்.
இதனை கண்ட அங்கிருந்த இரயில்வே அதிகாரிகள் அந்த நபரை மேலே இழுத்து உயிரை காப்பாற்றினர்" என்றார். அந்த நபர் தற்கொலை செய்து கொள்வதற்காக வேண்டுமென்றே விழுந்தாரா அல்லது தவறி விழுந்தாரா என்று தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் !
Also Read
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!