India
பஜ்ஜி எண்ணையில் கார் ஓட்டும் நபர் :வேலை செய்யும் விவேக்கின் யுக்தி
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் அவினாஷ். 40 வயதுடைய இவர், கடந்த 9 ஆண்டுகளாக பொறித்த எண்ணையில் கார் ஓட்டி வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அவர் இது வரை 1.20 லட்சம் கி.மீ. வரை கார் ஓட்டியுள்ளார்.
அது எப்படி பொறித்த எண்ணையை கொண்டு காரை இயக்க முடியும் என்று குழப்பத்தில் இருப்போம். இது குறித்து அவினாஷ் விளக்கத்தையும் கொடுத்துள்ளார். அதாவது, அவர் முதலில் கடைக்கு சென்று பஜ்ஜி, போண்டா, போன்று பல பொருட்களை பொறித்த எண்ணையை குறைந்த விலை வாங்கி வருவார்.
இதையடுத்து வாங்கி வந்த எண்ணையை சுத்திகரிப்பு செய்வார். பின்னர் அதனை எரிபொருளாக மாற்றி தனது காருக்கு பயன்படுத்தி காரை உபயோகப்படுத்தியுள்ளார். அந்த எண்ணெய் சுத்திகரிப்புக்கு வெறும் ரூ.65 மட்டுமே ஆவதாக அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவ்வாறு சுத்திகரிக்கப்படும் எண்ணெயில் இருந்து 700 முதல் 800 மி.லி எரிபொருள் கிடைக்கிறது. இப்படி அவர் சுத்திகரித்த எண்ணெய் பயன்படுத்தி இதுவரை, சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்துள்ளார். இவரது காருக்கும் இதுவரை எந்த ஒரு பழுதும் ஏற்படவில்லை.
இதனை அவர் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை செய்து வருகிறார். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கப்படும் எரிபொருளானது லிட்டருக்கு 15 முதல் 17 கி.மீ ‘மைலேஜ்’ கிடைக்கிறது. மேலும் இது அனைத்து டீசல் வாகனங்களுக்கும் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறுகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற டீசல் வாகனத்தில் இருந்து வரும் புகையை விட, சுத்திகரித்த எண்ணெயை பயன்படுத்தி உபயோகிக்கும் வாகனத்தில் இருந்து வரும் புகை மிகவ்வும் குறைவாக உள்ளதாகவும், இது சுற்றுச்சூழலுக்கு எந்த வித கெடும் விளைவிக்காத வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலை காரணமாக, கடையில் பொறித்த எண்ணையை வாங்கி அதை சுத்திகரித்து இப்படி பயன்படுத்துவது எவ்வளவோ நல்லது என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவையனைத்தும் தகவலின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று கடந்த 2020 ஆம் ஆண்டு தென்காசியில் சுற்றுச் சூழலுக்கும் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் பயோடீசல் ஆக மாற்றும் திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!