India
பாலியல் வழக்கில் சிறைக்குச் சென்ற காதலன்.. தவறை சரி செய்ய நினைத்த காதலிக்கு நடந்த சோகம் : பின்னணி என்ன ?
மும்பையின் விக்ரோலி பகுதியை சேர்ந்த ஷியாம் ஹண்டே (26) என்பவரும் அதே பகுதியில் வசிக்கும் 21 வயது பெண்ணும் கடந்த இரண்டு வருடமாக காதலித்து வந்தனர். இவர்கள் இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரிந்த நிலையில் ஷியாம் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஷியாம் ஹண்டேவை கைது செய்த போலிஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் பல மாதம் அவர் சிறையில் இருந்த நிலையில் ஜாமினில் வெளிவந்துள்ளார். சிறையில் இருந்து வெளிவந்ததும் அவர் காதலி அவரை தொடர்புகொள்ள முயன்றுள்ளார்.
ஆனால், தன்னை சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்த காதலியிடம் பேச ஷியாமுக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் வேறு இடத்துக்கு சென்று வசிக்கத் தொடங்கியுள்ளார். ஆனாலும், அவரிடம் பேச அவர் காதலி தொடர்ந்து முயன்று வந்துள்ளார்.
இதனால் தனது காதலரை தன்னிடம் பேசவைக்க அவரது காதலி புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார். அதன்படி காதலிக்கும்போது ஷியாமின் பைக் சாவி ஒன்று அவரின் காதலியிடம் இருந்துள்ளது. அதை தனது நண்பரிடம் கொடுத்த ஷியாமின் காதலி அதை வைத்து ஷியாமின் பைக்கை திருடியுள்ளார். தனது பைக் திருடப்பட்டது தொடர்பாக ஷியாம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சிறிது நாட்களுக்கு பிறகு ஷியாமை தொடர்புகொண்ட அவரின் காதலி, மீண்டும் என்னுடன் பேச ஆரம்பித்தால், காணாமல்போன உன்னுடைய பைக் எங்கிருக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும் என மெசேஜ் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷியாம் போலிஸில் இது தொடர்பாக கூறியுள்ளார்.
பின்னர் போலிஸ் இது தொடர்பாக அவரின் காதலியை அழைத்து விசாரித்தபோது காதலரை பேச வைக்க அவரின் பைக்கை திருடியது தெரியவந்தது. காதலி கூறிய தகவலின்படி அங்கு சென்று பைக்கை தேடியபோது அதை டிராபிக் போலிஸார் எடுத்துச்சென்றது தெரியவந்தது.
பின்னர் திருட்டு வழக்கில் போலிஸார் ஷியாமின் முன்னாள் காதலியை கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!