India
பட்டப்பகலில் மனைவியை கத்தியால் சராமரியாக குத்திய கணவன்.. புதுச்சேரி நடந்த பரபரப்பு சம்பவம்!
புதுச்சேரி தியாகு முதலியார் வீதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி, தேவி என்கிற மிதிலாதேவி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மிதிலாதேவியை சசிகுமார் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு தீனா (14), தீபா (9) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அண்மைக்காலமாக சசிகுமார், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் சசிகுமாரிடம் சண்டையிட்டு மிதிலாதேவி கடந்த 10 மாத காலமாக தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
தாய் வீட்டில் இருக்கும் மிதிலாதேவி, மற்ற வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்து தனது குழ்நதைகளை பராமரித்து வந்துள்ளார். இதனிடையே மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த சசிகுமார், மிதிலாதேவி வேலை செய்யும் இடங்களுக்கு சென்று மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சசிகுமார், தனது மனைவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கத்திய எடுத்து மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சராமரியாக குத்தியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் மனைவியை சராமாரியாக குத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது . தற்போது வரை அவரது மனைவி சிகிச்சையில் உள்ளார். மேலும் மனைவியை கத்தியால் குத்திய சசிகுமாரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!
-
“ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!