India

ஆசிரியைகள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திய தலைமையாசிரியர்.. சம்பவத்தின் பின்னணி என்ன?

உத்தரப் பிரதேசத்தின் பேரல்லி மாவட்டத்தில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தலைமையாசிரியராக குர்ஷித் அலி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மீது பெண் ஆசிரியைகளை ரகசியமாக வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் குர்ஷித் அலி பெண் ஆசிரியைகளை வீடியோ எடுத்ததை கையும் களவுமாக பிடித்து வாக்குவாதத்தால் ஈடுபட்டனர்.

இதனால் ஆவேசமடைந்த தலைமையாசிரியர் குர்ஷித் அலி பெண் ஆசிரியர்கள் மீது கற்களை எரிந்து அவர்களின் மொபைல் ஃபோன்களையும் கைப்பற்ற முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் அனைத்தும் பள்ளி குழந்தைகள் முன் நடந்ததால் அச்சமடைந்த குழந்தைகள் உடனடியாக வீடுகளுக்கு சென்று இது தொடர்பாக தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் பெற்றோரும் பள்ளிக்கு வந்து இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தலைமை ஆசிரியர் குர்ஷித் அலி மீது பள்ளியின் ஆண், பெண் ஆசிரியர்கள் இணைந்து, வீடியோ ஆதாரத்துடன் புகாரளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தலைமை ஆசிரியர் குர்ஷித் அலியைப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read: "இங்கிலாந்து அணி எதுவும் கற்றுக்கொள்ளவில்லை!” முட்டு கொடுக்கும் மைக்கேல் வாகனே விமர்சிக்க காரணம் என்ன?