India

"முடிந்தால் பிடி.. DHOOM 4 விரைவில்" பள்ளியில் கம்ப்யூட்டரை திருடிய திருடர்கள் : Black Board மூலம் சவால்!

ஒடிசா மாநிலம் நபரங்பூரிலுள்ள காதிகுடா என்ற பகுதியில் இந்திராவதி திட்ட மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை காலை திறந்தபோது, அங்கு தலைமையாசிரியர் அறையிலுள்ள Computers, Printers, Speakers போன்ற மின்னணுப் பொருட்கள் திருடு போயிருந்தது.

இதையடுத்து அதன் அருகிலிருந்த மற்றொரு வகுப்பின் கரும்பலகையில் (Black Board-ல்), எச்சரிக்கை செய்தி ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில், " 'தூம் 4', 'நாங்கள் திரும்புவோம்.. விரைவில் வருவோம்' " என்றிருந்தது. மேலும் "முடிந்தால் எங்களை பிடி" என்றும் ஒடியா மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தலைமையாசிரியர் சர்பேஸ்வர் பெஹெரா, உடனே காவல்துறைக்கு தகவல் அளித்து புகாரளித்துள்ளார்.

ஏற்கனவே இது போன்ற சம்பவம் அதே மாநிலத்தில் உள்ள நந்தஹண்டி தொகுதிக்கு உட்பட்ட தஹானா பள்ளியிலும், தென்துளிக்குண்டி தொகுதி கல்வி அலுவலகத்திலும் கணினிகள் போன்ற மின்னணு பொருட்கள் திருட்டுபோயிருந்தது. இந்த நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2004 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தூம்' திரைப்பட2த்தின் வெற்றியை தொடர்ந்து, 2006 ஆம் ஆண்டு 'தூம் 2' வெளியானது. இதையடுத்து 2013 ஆம் ஆண்டு 'தூம் 3' வெளியானது. இந்த நிலையில் கிட்ட தட்ட 10 வருடங்கள் ஆகவிருக்கும் நிலையில், 'தூம் 4' திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆசிரியைகள் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்திய தலைமையாசிரியர்.. சம்பவத்தின் பின்னணி என்ன?