India
பாட்டை மாற்றக் கூறியவர் மேல் ஆசிட் வீச்சு.. திருமண நிகழ்ச்சியில் நடத்த சோகம்.. பின்னணி என்ன?
கடந்த ஜூலை 9ம் தேதி அன்று உத்தரபிரதேச மாநிலம் பரேய்லி அருகே ராஜூவ் குமார் என்பவர் மீது மர்மநபர்கள் ஆசிட் வீசியுள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் போலிஸாருக்கு தெரியவந்துள்ளது.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட ராஜூவ் குமார் கூறிய வாக்குமூலத்தின்படி ஜூன் 7ம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு நடைபெற்ற டிஜே பார்ட்டியில் கணேஷ் லால் மற்றும் அரவிந்த் குமார் என்ற இருவர் நடனமாடிக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது அங்கு சென்ற ராஜூவ் குமார் பாடலை மாற்றுமாறு கூறியுள்ளார். இதற்கு கணேஷ் லால் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் பாட்டை மாற்ற ராஜூவ் குமார் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் இது வாக்குவாதமாக மாறி கைகலப்பாகியுள்ளது.
இந்த சண்டையை அங்கு இருந்தவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆத்திரத்தில் இருந்த கணேஷ் லால் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் ராஜூவ் குமாரை பழிவாங்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான்
கடந்த ஜூலை 9ம் தேதி அன்று இருவரும் சேர்ந்து ராஜூவ் குமார் மேல் ஆசிட் வீசியுள்ளனர். இது குறித்துப் பேசிய மருத்துவர்கள் ராஜூவ் குமாருக்கு 70% காயங்கள் ஏற்பட்டு இருப்பதால் அவர் உயிர்பிழைப்பது கடினம் என கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆசிட் வீசிய கணேஷ் லால் மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் மீது போலிஸ் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என ராஜூவ் குமாரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் தனக்கும் கொலை மிரட்டல் வந்ததாக ராஜூவ் குமாரின் தந்தை கூறியுள்ளார்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!