India
ஆட்டோ மீது அறுந்து விழுந்த மின் கம்பி.. உடல் கருகி 8 பேர் பலி: காலையில் நடந்த கோர விபத்து!
ஆந்திரா மாநிலம், ஸ்ரீசத்யசாய் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ஆட்டோ மீது உயர்மின் அழுத்த கம்பி விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இன்று காலை விவசாய வேலைக்காக ஒரே ஆட்டோவில் பலர் சென்றுள்ளனர். இந்த ஆட்டோ சில்லகொண்டையா பள்ளி கிராமம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாகச் சாலையிலிருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளது.
இதனால் உயர்மின் அழுத்த கம்பிகள் அறுந்து ஆட்டோ மீது விழுந்தவுடன் தீ பிடித்துள்ளது. இந்த தீ விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் சிக்கியுள்ளனர். இது குறித்து உடனே மின்வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸாரும், தீயணைப்பு வீரர்களும் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் மீட்புப்பணியில் ஈடுபட்டபோது உடல் கருகி 8 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் பலர் தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆட்டோவில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. இந்த கோர விபத்து குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலையிலேயே இப்படியான கோர விபத்து நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு என்பது கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பேசவிடு! பேசவிடு! உண்மையை பேசவிடு!” : சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்ததால் தி.மு.க வெளிநடப்பு!
-
பொதுவாழ்வில் இருக்கும் பெண்கள் மீது அநாகரிகமான தாக்குதல்! - கனிமொழி கண்டனம்!
-
ஒவ்வொரு தொண்டரும் ஒரு நிர்வாகி ; உடன்பிறப்புகள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்றம் : முரசொலி!
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?