India

அசாமில் ஒரு அண்ணாமாலை! கணுக்கால் அளவு நீரில் படகில் சென்ற பாஜக அமைச்சர் - கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்!

அஸ்ஸாமில் மழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதன் கரைகளில் உள்ளவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

மாநிலத்தின் மொத்தமுள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தில் 45.34 லட்சம் மக்கள் தத்தளித்து வருவதாகவும் வெள்ளத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பார்பெட்டா மாவட்டத்தில் 10,32,561 பேர் வெள்ளத்தில் தத்தளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க பல தன்னார்வலர்களும் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பா.ஜ.கவை சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா நோயாளி ஒருவரை படகில் அமரவைத்து அதை ஓட்டி சென்றுள்ளார்.

அந்த வீடியோவில் அவருடன் கால் அளவே உள்ள நீரில் சிலர் நடந்து வருவதும் பதிவாகியுள்ளது. அசாம் அமைச்சரின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த முறை வெள்ளம் ஏற்பட்டபோது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முட்டுகால் அளவு உள்ள நீரில் படகில் சென்று மக்களை சந்தித்தது பெரும் காமெடியாக பார்க்கப்பட்டது. அதேபோல ஒரு சம்பவம் அஸ்ஸாமிலும் நடந்துள்ளது பா.ஜ.க தலைவர்கள் என்றாலே இப்படித்தான் என்ற பார்வையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

Also Read: படுக்கை முழுக்க கட்டுகட்டாக நோட்டுகள்.. சோதனையில் சிக்கிய லஞ்ச பணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!